தமிழ்நாடு

பள்ளி காலை உணவு திட்டத்தில் பொருட்கள் தரம் சரியாக உள்ளதா? மயிலாடுதுறை கலெக்டர் சோதனை

Published On 2024-02-01 08:54 GMT   |   Update On 2024-02-01 08:54 GMT
  • இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
  • தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

சீர்காழி:

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சீர்காழியில் கடந்த 24 மணி நேர ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலை 9 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு பணியை தொடங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தது. இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரவு கொள்ளிடத்தில் தங்கினார்.

இந்நிலையில் இன்று (1-ந்தேதி) அதிகாலையில் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியினை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் கொள்ளிடம் புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் மையத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் எருக்கூர் நவீன அரிசி ஆலையில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வில் கோட்டாட்சியர் அர்ச்சனா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கண்மணி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் மஞ்சுளா கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழிஉள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ஆய்வில் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News