தமிழ்நாடு செய்திகள்

திமுகவால் வாழ்வது கருணாநிதி குடும்பம்தான்.. ஏனென்றால்..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-08-27 23:45 IST   |   Update On 2023-08-27 23:45:00 IST
  • பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் வாழ்ந்தது அவரது நண்பர் அதானி ஒருவர்தான்.
  • சிஏஜி அறிக்கை மூலம் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால மோசடிகள் வெளிவர தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டையில் இன்று திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் குற்றம்சாட்டுவது போல, திமுக ஆட்சிக்கு வந்தால் வாழ்வது கருணாநிதி குடும்பம்தான். ஏனென்றால், இங்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் கருணாநிதியின் குடும்பம்தான்.

பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் வாழ்ந்தது அவரது நண்பர் அதானி ஒருவர்தான். சிஏஜி அறிக்கை மூலம் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால மோசடிகள் வெளிவர தொடங்கியுள்ளது.

கடந்த 20ம் தேதி ஒரு கட்சியின் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ஏன் நடந்தது என்றே தெரியவில்லை. மாநாடு எப்படியெல்லாம் நடத்தக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். அதிமுக மாநாட்டிற்கு சென்ற ஒருவர் தன் மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாநாட்டு பொறுப்பாளரான ஜெயக்குமாரிடம் விசாரிக்க வேண்டும்.

இனி வரக்கூடிய காலங்களில், யாருக்கும் சால்வை போன்றவைகளை அணிவிக்காமல் புத்தகங்களை வழங்குங்கள். விளம்பர பதாகைகள் வைக்காதீர்கள். பட்டாசு வெடிக்காதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News