தமிழ்நாடு செய்திகள்
ஆசிரியர் தகுதித்தேர்வு- தமிழகம் முழுவதும் நாளை 3½ லட்சம் பேர் எழுதுகிறார்கள்
- இரண்டாம் தாளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை நடக்கிறது.
- தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தனர்.
சென்னை:
இரண்டாம் தாளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை (3-ந்தேதி) நடக்கிறது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 3½ லட்சம் பேர் எழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் மூலமாக தொடங்கும் இத்தேர்வு 12-ந்தேதி வரை நடக்கிறது. தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தனர்.
அனைத்து மாவட்டங்களிலும் முதல்கட்டமாக 3-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலும் நடக்கிறது. காலை மற்றும் மாலை இருவேளையிலும் இத்தேர்வு நடைபெறுகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கல்வி அதிகாரிகள் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.