தமிழ்நாடு செய்திகள்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2023-09-27 22:08 IST   |   Update On 2023-09-27 22:08:00 IST
  • கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக விந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, நெல்லை மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக விந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அதிமுக அமைப்பு செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, பாஸ்கரன், ராயபுரம் மனோ, திருச்சி மனோகரன், தஞ்சை காந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக மருத்துவ அணி இணை செயலாளராக மருத்துவர் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி கிழக்கு, மேற்கு என இருந்ததை ஒருங்கிணைத்து, புதுச்சேரி மாநிலம் என மாற்றியமைத்து, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News