தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்

Published On 2024-04-25 14:10 IST   |   Update On 2024-04-25 15:04:00 IST
  • ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம்.
  • மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்.

நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகையுடன் நடிகர் மன்சூர் அலிகான் இன்று சந்தித்து பேசினார்.

அப்போது, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், " முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்.

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளேன்" என்றார்.

Tags:    

Similar News