தமிழ்நாடு செய்திகள்

சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்த 50-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம்

Published On 2023-12-08 11:28 IST   |   Update On 2023-12-08 11:28:00 IST
  • மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் நேற்று மாலை முதல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
  • அனைத்தும் தற்போது ராயக்கோட்டை அருகே ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு சென்றடைந்தது.

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே சானமாவு வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தஞ்சமடைந்தது. அந்த யானைகள் கூட்டத்தை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது, யானைக் கூட்டங்களை மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் நேற்று மாலை முதல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் யானை கூட்டங்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வரும், இதேபோல் இந்த ஆண்டும் ஜவளகிரி வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் தமிழக எல்லைக்குள் புகுந்தது.

பல குழுக்களாக பிரிந்த யானை கூட்டங்கள் 50-க்கும் மேற்ப்பட்ட யானை கூட்டங்கள் தேன்கனிக்கோட்டை வழியாக ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்தடைந்தது.

தற்போது ராகி, நெல் அறுவடை சீசன் காலம் என்பதால் யானைக் கூட்டங்களை விரட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து யானைக் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர் நேற்று மாலை முதல் 20-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் யானைகளை விரட்டும் பணியை ஈடுபட்டனர்.

அப்போது 50-க்கு மேற்ப்பட்ட யானைகள் தனது குட்டிகளுடன் கூட்டமாக கெலமங்கலம் உத்தனப்பள்ளி சாலையை கடந்து சென்றது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அவைகள் அனைத்தும் தற்போது ராயக்கோட்டை அருகே ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு சென்றடைந்தது.

தற்போது ராயக் கோட்டை வனச்சரகர் வெங்கட்டாசலம் தலைமையில் வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News