தமிழ்நாடு

சரக்கு ரெயில் என்ஜீன் கோளாறு: தருமபுரி வழியாக செல்லும் 6 ரெயில்கள் தாமதம்

Published On 2023-06-24 06:35 GMT   |   Update On 2023-06-24 06:35 GMT
  • தகவலறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது.
  • அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.

தருமபுரி:

சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்ட ஒரு சரக்கு ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ராயக்கோட்டையில் நேற்று நள்ளிரவு வந்தடைந்தது. அந்த ரெயிலில் திடீரென்று என்ஜீனில் ஏற்பட்டது. உடனே ரெயில் என்ஜீன் டிரைவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது. இதன்காரணமாக பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக செல்லக்கூடிய பெங்களூரு-தருமபுரி பாசஞ்சர் ரெயில், பெங்களூரு-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், குர்லா எக்ஸ்பிரஸ், கண்ணனூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரெயில்களும் 3மணி நேரம் தாமதம் ஆனது.

பெங்களூரு-சேலம் ரெயில்கள் தாமதம் ஆனது. இதனால் கெலமங்கலம் ரெயில் நிலையத்தில் வெளியூருக்கு செல்வதற்காக காத்திருந்த பயணிகள் அங்கு 3 மணிநேரம் ரெயில்கள் ஏதும் வராமல் அடுத்தடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் காத்து இருந்தனர். அப்போது அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.

Tags:    

Similar News