தமிழ்நாடு

முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி.க்கள்-சப்-இன்ஸ்பெக்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி. 

புதிதாக 444 சப் இன்ஸ்பெக்டர்கள் 17 டி.எஸ்.பி.க்களுக்கு பணி நியமனம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2023-02-07 07:25 GMT   |   Update On 2023-02-07 07:25 GMT
  • நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
  • பணி நியமனம் பெற்ற 17 டி.எஸ்.பி.க்களில் 13 பேர் பெண்கள் ஆவார்கள்.

சென்னை:

தமிழ்நாட்டில் புதிதாக 444 சப்-இன்ஸ்பெக்டர்கள், 44 டி.எஸ்.பி.க்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 17 டி.எஸ்.பி.க்களும், சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 444 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவர்களுக்கு பணி நியமனங்களை வழங்கிடும் அடையாளமாக 5 பேர்களுக்கு ஆணைகள் வழங்கினார். பணி நியமனம் பெற்ற 17 டி.எஸ்.பி.க்களில் 13 பேர் பெண்கள் ஆவார்கள்.

இதே போல் சப்-இன்ஸ்பெக்டர்களில் 133 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.எஸ்.பி. சைலேந்திரபாபு உடன் இருந்தனர். 

Tags:    

Similar News