தமிழ்நாடு

விவசாய குட்டையில் சிக்கி தவித்த குட்டி யானையை படத்தில் காணலாம்.

விவசாய குட்டையில் தவறி விழுந்த 4 வயது ஆண் யானை குட்டி மீட்பு

Published On 2023-11-23 05:14 GMT   |   Update On 2023-11-23 05:14 GMT
  • நள்ளிரவு வனக்குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது யானை குட்டி குட்டைக்குள் சிக்கி இருப்பதை பார்த்தனர்.
  • தொடர்ந்து வனத்துறையினர் யானை குட்டியை கண்காணித்து வருகிறார்கள்.

கோவை:

கோவை மதுக்கரை வன சரகத்துக்குட்பட்ட மங்களபாளையத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் இந்த தோட்ட பகுதிக்கு வந்தது. அப்போது 4 வயது ஆண் யானை குட்டி தோட்டத்தில் உள்ள விவசாய குட்டையில் தவறி விழுந்தது. இதில் வெளியே வரமுடியாமல் யானை குட்டி உயிருக்கு போராடியது. நள்ளிரவு வனக்குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது யானை குட்டி குட்டைக்குள் சிக்கி இருப்பதை பார்த்தனர். உடனடியாக அவர் இது குறித்து வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் வனச்சரக அலுவலர் தலைமையில் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் தண்ணீர் நிரம்பி இருந்த குட்டை மட்டம் செய்யப்பட்டு யானை குட்டியை குட்டையில் இருந்து வெளியேற்றினர். பின்னர் பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் யானை குட்டியை கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News