தமிழ்நாடு

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா

Published On 2022-06-26 04:40 GMT   |   Update On 2022-06-26 04:40 GMT
  • மாணவர்கள் சிலருக்கு கொரோனா மற்றும் காய்ச்சல் அறிகுறி இருந்தது.
  • மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர்:

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 125 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதியும் இருக்கிறது.

இந்த நிலையில் மாணவர்கள் சிலருக்கு கொரோனா மற்றும் காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியின் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 3 மாணவர்களும் தனிமைபடுத்தப்பட்டனர். அவர்களை தொடர்ந்து தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவக்கல்லூரியின் வகுப்பறைகள், விடுதி அறைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் இன்று கிருமினிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்லூரியின் டீன் சங்குமணி தெரிவித்தார்.

Tags:    

Similar News