தமிழ்நாடு செய்திகள்
பண்ருட்டியில் தீ விபத்து- பலாப்பழ குடோன் எரிந்து நாசம்
பலாப்பழ குடோன் தீ விபத்து தொடர்பாக காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் கொட்டிகோனான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் பணிக்கன்குப்பத்தில் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் பலாப்பழ மண்டி நடத்தி வருகிறார். அதோடு குடோனும் உள்ளது.
இந்த குடோனில் இருந்து வெளியூருக்கு பலாப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது கிராம பகுதியில் அறுவடை செய்யப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான பலாப்பழங்கள் குடோனில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்தது.
நேற்று இரவு இந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பலாப்பழ மண்டிகள் உள்ளது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கம் உள்ள பலாப்பழ வியாபாரிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
எனினும் அங்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பலாப்பழங்கள், 1 மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டதால் அருகில் உள்ள பலாப்பழ மண்டிகள் தீ விபத்தில் இருந்து தப்பியது.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.