தமிழ்நாடு
சில்லுவட்டுகள்

கீழடி 8-ம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலையின் எச்சங்கள் கண்டெடுப்பு

Published On 2022-05-23 05:47 GMT   |   Update On 2022-05-23 05:47 GMT
இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சும் போது மீதமான உருக்கு கழிவுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வருகின்றன.

கீழடியில் 5 குழிகளும். கொந்தகை மற்றும் அகரத்தில் தலா 2 குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் இந்த ஆய்வில் கீழடியில் 2 மெகா சைஸ் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.

மேலும் சில நாட்களுக்கு முன்பு பழங்காலத்தில் சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய வட்ட வடிவிலான சில்லு வட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து தற்போது அந்த இடத்தில் இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சும் போது மீதமான உருக்கு கழிவுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

2600 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை காய்ச்சி ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் செய்திருக்கலாம் என்றும், கீழடியில் இரும்பை உருக்கும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் கருதப்படுகிறது.

6-ம் கட்ட அகழாய்வின் போது இரும்பு ஆயுதம், குத்துவாள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. எனவே 2600 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் அகழாய்வின் போது மேலும் பல உறுதியான ஆதாரம் வெளிப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Tags:    

Similar News