தமிழ்நாடு செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு

உத்திரமேரூர் அருகே அரசு ஆஸ்பத்திரி, நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு

Published On 2022-04-28 11:50 IST   |   Update On 2022-04-28 11:50:00 IST
சாலவாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு செய்தார். டாக்டர்களின் வருகை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
காஞ்சீபுரம்:

காஞ்சிபுரம் மாவட் டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி பொதுமக்களுக்கு சென்றடைய மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மாவட்டம் முழுவதும் அவ்வபோது ஆய்வு பணியில் ஈடுபட்டு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பித்து வருகிறார். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உத்திரமேரூர் ஒன்றியம் பகுதியில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார். அப்போது சாலவாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு செய்தார். டாக்டர்களின் வருகை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து ரெட்டமங்கலத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டார். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ள நெல் குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Similar News