தமிழ்நாடு செய்திகள்
பெண்

ஆரணியில் பரபரப்பு- இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் ஓட்டம்

Published On 2022-04-21 11:30 IST   |   Update On 2022-04-21 11:30:00 IST
மணமகளுக்கு மாப்பிள்ளை பிடிக்காதால் ஓட்டம் பிடித்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணி புதுகாமூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்த நிலையில் அவர் ஒரு நாள் கூட கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

பெற்றோர் அவரை சமாதானம் செய்து வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்தனர். அவர்களுக்கு இன்று ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மணமகள் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை, ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணமகள் மாப்பிள்ளை பிடிக்காதால் ஓட்டம் பிடித்தாரா அல்லது வேறு வாலிபருடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar News