தமிழ்நாடு செய்திகள்
மாணவன் தேன்ராஜ்

ரெயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவன் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

Published On 2022-04-21 11:16 IST   |   Update On 2022-04-21 11:16:00 IST
மாணவன் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் ஸ்ரீராம்நகரை சோந்தவர் வெங்கடேசன் சிமெண்டு வியாபாரி. இவரது மனைவி செல்வி தம்பதிக்கு மகன் முத்துராஜ் (23), தேன்ராஜ் (21), விஜயராஜ் (20) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இதில் தேன்ராஜ் வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு மாணவன் தினந்தோறும் களம்பூரில் இருந்து ரெயிலில் சென்று வந்தார்.

நேற்று கல்லூரிக்கு சென்ற தேன்ராஜ் வீடு திரும்பவில்லை. இதனால் வெங்கடேசன் மகனை தேடி கடம்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.

அங்கு தேன்ராஜ் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். ரெயிலை விட்டு இறங்குவது இடது புறம் ஆனால் தண்டவாளத்தின் வலது புறத்தில் தேன்ராஜ் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து வெங்கடேசன் கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் மாணவன் பிணத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவன் உடலில் காயங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News