தமிழ்நாடு செய்திகள்
கல்லூரி மாணவி ஹம்சினி

கடலூர் மாநகராட்சியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கும் கல்லூரி மாணவி

Published On 2022-02-04 08:39 IST   |   Update On 2022-02-04 08:39:00 IST
பா.ஜ.க. அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கடலூர் மாநகராட்சியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கும் கல்லூரி மாணவி ஹம்சினி கூறினார்.
கடலூர்:

கடலூர் மாநகராட்சி 21-வது வார்டில் பா.ஜனதா சார்பில் புதுப்பாளையம் சுப்பிரமணியசுவாமி கோவில் தெருவை சேர்ந்த 23 வயதுடைய பி.எஸ்சி., (கண் பரிசோதனை) இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஹம்சினி பொன்னிரவி போட்டியிடுகிறார். இவர் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதுபற்றி கல்லூரி மாணவி ஹம்சினி கூறுகையில், பிரதமர் நரேந்திரமோடி பற்றியும், அவரது திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு தெரியவில்லை. நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பேன். பா.ஜ.க. அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Similar News