தமிழ்நாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

ஒமைக்ரான் பயத்தால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது

Published On 2021-12-04 09:24 GMT   |   Update On 2021-12-04 09:24 GMT
ஒமைக்ரான் பயத்தால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துவிட்டது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா முடிவடைந்த நிலையில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர்.

இதற்கிடையே பொதுமக்கள் மத்தியில் ஒமைக்ரான் வைரஸ் பீதி பரவியதால் வெளியூர் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துவிட்டது.

இன்றும் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளது. அதிகளவில் ஐயப்ப பக்தர்கள் வருகை தந்தனர். அவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் வருகை நின்றுபோனதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.


Tags:    

Similar News