பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு!
- ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது
- சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 19 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தாம்பரம் வந்தடையும்
செங்கல்பட்டில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தென்காசி சென்றடையும். தென்காசியில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 19 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் செங்கல்பட்டு வந்தடையும்
சென்னையில் இருந்து ஜனவரி 9 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தென்காசி சென்றடையும்.
தாம்பரத்தில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 21 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தாம்பரம் வந்தடையும்
பொத்தனூரில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் செங்கொட்டை சென்றடையும்.
சென்னையில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் செங்கொட்டை சென்றடையும்.
சென்னையில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மங்களூரு சென்றடையும்.
சென்னையில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் கோவை சென்றடையும். கோவையில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 19 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் சென்னை வந்தடையும்
சென்னையில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் போத்தனூர் சென்றடையும். போத்தனூரில் இருந்து மறுமாா்க்கமாக ஜனவரி 21 ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் சென்னை வந்தடையும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.