செய்திகள்
அந்தமான் அருகே மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை 13-ந்தேதி உருவாகிறது
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 13-ந் தேதிக்கு பிறகு மீண்டும் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் மிக பலத்த மழை கொட்டியது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாளை (11-ந் தேதி) கடலூர் அருகே கரையை கடக்கும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்பட வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் அதிகளவில் மேகக் கூட்டங்கள் காணப்படுகின்றன. அவை 13-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று வானிலை இலாகா கூறி இருக்கிறது.
அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் என்றும் கூறி உள்ளனர். இதனால் 13-ந் தேதிக்கு பிறகு மீண்டும் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.