இந்தியா

சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ திடீர் ராஜிநாமா... காரணம் என்ன?

Published On 2026-01-21 17:14 IST   |   Update On 2026-01-21 17:14:00 IST
  • தனக்கு இன்னும் வழங்கப்படாத அனைத்துப் பங்கு விருப்பத்தேர்வுகளையும் நிறுவனத்தின் பொதுவான ESOP தொகுப்பிற்கே திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
  • CEO பதவியிலிருந்து விலகினாலும், நிறுவனத்தின் துணைத் தலைவராக தொடர்ந்து செயல்படுவார்.

சொமேட்டோ மற்றும் பிளிங்கிட் நிறுவனங்களின் தாய் நிறுவனமான எடர்னல் குழும சிஇஓ பதவியில் இருந்து தீபிந்தர் கோயல் விலகியுள்ளார். பிளிங்கிட்-ன் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான அல்பிந்தர் சிங் திண்ட்ஸா Eternal-ன் புதிய குழும தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினாலும், நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், இயக்குநராகவும் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எடர்னல் எப்போதும் எனது வாழ்நாள் பணியாகவே இருக்கும்" என்றும், இந்த மாற்றம் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்காது என்றும் அவர் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிளிங்கிட் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ அல்பின்டர் திண்ட்சா பிப்ரவரி 1 முதல் எடர்னல் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாகப் பொறுப்பேற்பார்.

எடர்னல் போன்ற ஒரு பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் சட்டப்பூர்வ எதிர்பார்ப்புகளுக்கு முழுமையான கவனம் தேவைப்படுகிறது. ஆனால் தான் தற்போது அதிக ரிஸ்க் மற்றும் சோதனைகள் நிறைந்த புதிய யோசனைகளை ஆராய விரும்புவதால், அந்த முயற்சிகளை நிறுவனத்திற்கு வெளியே மேற்கொள்வது சிறந்தது என தோன்றுகிறது என தனது விலகல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  

Tags:    

Similar News