செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. முகவர்கள் கவனம் செலுத்தி வாக்காளர்களை சேர்க்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Published On 2021-11-03 07:42 GMT   |   Update On 2021-11-03 07:42 GMT
முகவர்கள் நியமிக்கப்படாத வாக்கு சாவடியில் உடனடியாக முகவர்கள் நியமித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியல் சமர்பிக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்காக வருகிற 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், வாக்குச்சாவடி நிலை முகவர்களும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

18 வயது பூர்த்தியானவர்களையும், பட்டியலில் இடம் பெறாதவர்களையும் புதியதாக குடிவந்தவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பட்டியலில் உள்ள தவறுகளையும் சரி செய்ய வேண்டும்.

இதற்காக முகாம்களுக்கு சென்று இந்த பணியை முழுமையாக செய்ய வேண்டும். முகவர்கள் நியமிக்கப்படாத வாக்கு சாவடியில் உடனடியாக முகவர்கள் நியமித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியல் சமர்பிக்கப்பட வேண்டும்.

இதற்கான பணிகளை முடித்து அதன் விவரங்களை தலைமை கழகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News