செய்திகள்
கோப்புப்படம்

கோவையில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை தகவல்

Published On 2021-08-19 09:19 IST   |   Update On 2021-08-19 09:19:00 IST
கோவை மாவட்டத்தில் 2 தவணை தடுப்பூசி 14.18 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் முதல் கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பொது மக்கள் தினமும் ஆர்வத்தோடு வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்கின்றனர். ஆனால் தடுப்பூசி தட்டுப்பாட்டால் அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மட்டும் 60 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 38 லட்சம் ஆகும். இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 27 லட்சம். இவர்களில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 16 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

தகுதியான மக்கள் தொகையில் இது 60 சதவீதமாகும். இதுதவிர 2 தவணை தடுப்பூசிகளும் 3 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் 2 தவணை தடுப்பூசிகளும் 14.18 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

60 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதால் கொரோனா 3-வது அலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Similar News