செய்திகள்
விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக அடைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைப்பு

Published On 2020-12-08 08:22 GMT   |   Update On 2020-12-08 08:22 GMT
விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
ஈரோடு:

விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் காய்கறி மார்க்கெட்டுகளும் அடைக்கப்பட்டிருந்தது.

ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட், சத்தியமங்கலம் பூ மார்க்கெட், பெருந்துறை தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவை அடைக்கப்பட்டிருந்தது.

கோபிசெட்டிபாளையம், சென்னிமலை, பெருந்துறை, புஞ்சை புளியம்பட்டி, கவுந்தப்பாடி, நம்பியூர், ஆப்பக்கூடல், பவானி, கொடுமுடி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒருசில டீ கடைகள் மட்டுமே திறந்திருந்தது. ஈரோடு மாநகரில் ஒருசில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

புஞ்சை புளியம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.

ஈரோட்டில் புகழ்பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தை வழக்கம்போல் செயல்பட்டது. ஆனாலும் வெளிமாநில வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் இன்றி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் வழக்கம்போல் அனைத்து பஸ்களும் ஓடியது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் வழக்கம்போல் இயங்கியது. போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ரெயில் நிலையம், பஸ் நிலையம், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News