செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் இன்று மேலும் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-19 15:18 IST   |   Update On 2020-08-19 15:18:00 IST
புதுச்சேரியில் இன்று மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,762 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:

உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 27,67,274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 64,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1092 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,889 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,762 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,312 பேர் குணமடைந்த நிலையில் கொரோனாவால் 129 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News