செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-16 11:12 IST   |   Update On 2020-08-16 11:12:00 IST
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,732 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63 ஆயிரத்து 489 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 89 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,732ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 4,443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Similar News