செய்திகள்
கொள்ளை முயற்சி

இருங்காட்டுக்கோட்டையில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி

Published On 2020-08-08 18:10 IST   |   Update On 2020-08-08 18:10:00 IST
இருங்காட்டுக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியில் மேலாளர் நேற்று மாலை வழக்கம் போல் ஊழியர்களுடன் வங்கியை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு இரும்பு ராடுடன் வந்த நபர் ஒருவர் வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று வங்கியில் உள்ள லாக்கரை இரும்பு கம்பியால் உடைக்க முறபட்டுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத்துவங்கியதும் கொள்ளையடிக்க வந்த நபர் வந்த வழியே தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து வங்கிக்கு வந்த ஊழியர்கள் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News