செய்திகள்
பஸ்சில் கூடு கட்டி முட்டைபோட்ட குருவி

ஊரடங்கால் வாகன போக்குவரத்து நிறுத்தம்- பஸ்சில் கூடு கட்டி முட்டைபோட்ட குருவி

Published On 2020-08-03 08:06 GMT   |   Update On 2020-08-03 08:06 GMT
விருத்தாசலத்தில் உள்ள பணிமனை 2-ல் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு கடந்த 4 மாதங்களாக ஒரே இடத்தில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு குருவி, தனது வீடாக பஸ்சை மாற்றி உள்ளது.
விருத்தாசலம்:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பஸ், ரெயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதத்திற்கும் மேலாக அரசு பஸ்கள் அனைத்தும், அந்தந்த போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், விருத்தாசலம், வடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பணிமனைகளிலும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் பணிக்கு சென்று வர மட்டும் மாவட்டத்தில் 12 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் விருத்தாசலத்தில் உள்ள பணிமனை 2-ல் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு கடந்த 4 மாதங்களாக ஒரே இடத்தில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு குருவி, தனது வீடாக பஸ்சை மாற்றி உள்ளது. ஆம், இந்த பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு பஸ்சில் குருவி ஒன்று கூடு கட்டி வசித்து வருகிறது. அதாவது டிரைவர் இருக்கையின் அருகில் உள்ள கண்ணாடியின் பின்புறம் குச்சிகளால் கூடு கட்டி, அதில் முட்டையிட்டு அடைகாத்து வருகிறது. இதற்கிடையே அதை பார்த்த பணிமனையில் உள்ள ஊழியர்கள், குருவி கூட்டை அகற்ற மனமின்றி, அதை பாதுகாத்து வருகின்றனர்.
Tags:    

Similar News