செய்திகள்
புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை
புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ள முதல்வர் நாராயணசாமி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் இன்றுடன் அன்லாக்-2 தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், ‘‘மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படும். இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி. புதுச்சேரிக்குள் வருபவர்களுக்கும், வெளியே செல்பவர்களுக்கும் இ-பாஸ் கட்டாயம். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.