செய்திகள்
டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்ற கூட்டம்

சிவகங்கை மாவட்ட எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்கள்

Published On 2020-06-25 18:55 IST   |   Update On 2020-06-25 18:55:00 IST
மதுரையில் பொதுமுடக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்ட எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகரித்துள்ளது.
சிவகங்கை:

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி பகுதி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி இந்த ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதில் மருத்துவ பணிகள், மருந்தகங்கள் ஆகியவற்றிற்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் மூடப்பட்டு இருந்தது. இறைச்சி, கோழி மற்றும் மீன் மொத்த விற்பனை கூடங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

மதுரையில் பொதுமுடக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்ட எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகரித்துள்ளது.

மதுரையை சேர்ந்தவர்கள் புலியூருக்கு சென்று மதுவாங்கி வருகின்றனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா பரவும் அச்சத்தில் புலியூர் மக்கள் உள்ளனர்.

Similar News