செய்திகள்
செங்கல்பட்டில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 131 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 131 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவில் வசிக்கும் 37 வயது ஆண், காட்டாங்கொளத்தூர் ரெயில்வே ஸ்டேஷன் தெருவை சேர்ந்த 40 வயது பெண், மறைமலைநகர் என்.எச்.1. திருநாவுக்கரசர் தெருவில் வசிக்கும் 42 வயது பெண், ரத்தினமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த 39 வயது ஆண், நல்லம்பாக்கம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,202 ஆக உயர்ந்தது. இவர்களில் 2,316 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 85 வயது மூதாட்டி, 64 வயது முதியவர், 50 வயது ஆண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.