செய்திகள்
சாராய விற்பனையை தடுத்த கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு
வேலூர் அருகே சாராய விற்பனையை தடுத்த கிராம மக்கள் மீது மலைக் கிராமத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அத்துடன் அரிவாளால் வெட்டியதில் விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
அடுக்கம்பாறை:
வேலூர் அடுக்கம்பாறை அருகே சோழவரம் கிராமம் மேற்கு கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 53), விவசாயி. இவர், வீட்டுக்கு அருகில் குருமலை, வெல்லைக்கல் மலை, நச்சிமேடு மலை ஆகிய கிராமங்களுக்குச் செல்ல மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண் சாலை வழியாகத்தான் மலைக் கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று வருவது வழக்கம்.
மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் சாராயத்தை காய்ச்சி, மண் சாலை வழியாக வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மலைக் கிராமத்தினர் சாராய விற்பனை செய்வதால் மேற்கு கொல்லைமேடு பகுதியில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கராஜ், மலைக் கிராமத்தில் செல்லும் மண் சாலையில் கம்புகளால் தடுப்பு வேலி அமைத்துள்ளார்.
இதையறிந்த மலைக் கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கும்பல் நேற்று நாட்டுத்துப்பாக்கி, கத்தி, அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து தங்கராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விநாயகம் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மலைக் கிராம கும்பல், சாராயம் குடிக்க வருவோருக்கு வழி விடாமல் ஏன் தடுக்கிறீர்கள்? உங்களால் தான் எங்களுக்கு சாராய விற்பனையே இல்லை, எனக் கூறி தங்கராஜை தலை, முதுகு, கால்கள் ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டினர்.
மேலும் தங்கராஜ் மற்றும் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளை மலைக் கிராம கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடினர். அவர்களை, தடுக்க முயன்றவர்கள், எதிர்த்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். கிராம மக்கள் பலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மலைக் கிராம கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவத்தால், கிராமமே களேபரமாகக் காட்சி அளித்தது.
மலைக் கிராமத்தினர் அரிவாளால் வெட்டியதில் தங்கராஜ் படுகாயம் அடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாராய விற்பனையை தடுத்த கிராம மக்கள் மீது மலைக் கிராமத்தைச் சேர்ந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.