செய்திகள்
கைது

வேளாங்கண்ணியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

Published On 2020-05-09 16:09 IST   |   Update On 2020-05-09 16:09:00 IST
வேளாங்கண்ணியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம், மே.9-

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்து உள்ள அகலங்கண் கிராமத்தை சேர்ந்த கம்பி பிட்டரான கேசவன் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே இவர்களை கண்டித்துள்ளனர். இதையடுத்து கேசவன், 17 வயது நிரம்பிய மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்த மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவனை தேடி வந்தனர். இந்நிலையில் அகலங்கண் கிராமத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் மாணவியும், கேசவனும் பதுங்கியிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து மாணவியை மீட்டு அழைத்துச் சென்றனர். மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, கேசவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர் கேசவனை நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Similar News