செய்திகள்
மதுபாட்டிலில் மிதந்த தவளை

சீர்காழியில் டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் மிதந்த தவளை- மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

Published On 2020-05-09 12:48 IST   |   Update On 2020-05-09 12:48:00 IST
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் டாஸ்மாக்கில் வாங்கிய மது பாட்டிலில் மிதந்த தவளையால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் ரம் வகை மதுபாட்டில் ஒன்று வாங்கியுள்ளார்.

பின்னர் அவர் அங்குள்ள வயல் பகுதிக்கு சென்று அந்த பாட்டிலை திறந்து பாதி மதுவை கப்பில் ஊற்றி விட்டு மீண்டும் பாட்டிலை மூடும் போது உள்ளே ஏதோ கிடப்பதை கண்டுள்ளார். என்ன என்று பார்த்தபோது, அந்த மது பாட்டிலில் தவளை ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து குடிக்க ஊற்றிய மதுவை கீழே ஊற்றிவிட்டு தவளை கிடந்த மதுபாட்டிலுடன் அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தகவல் வெளியே தெரியாமல் மறைக்க தவளையுடன் இருந்த மது பாட்டிலை பெற்றுக்கொண்டு உடனே புது மதுபாட்டிலை கடை ஊழியர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.

மதுவை குடித்து ஏற்படும் பாதிப்புகள் மட்டுமின்றி இது போன்ற ஆபத்துகளும் இருப்பது மது பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News