செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: அன்புமணி ராமதாசுடன் தொலைபேசியில் மோடி ஆலோசனை

Published On 2020-04-06 05:58 GMT   |   Update On 2020-04-06 05:58 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து என்னிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசித்தார் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க இளைஞர் அணித்தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று (நேற்று) மாலை தொலைபேசி மூலம் என்னை தொடர்புக்கொண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து ஆலோசித்தார். இந்த சிக்கலில் சிறப்பான தலைமை பண்பை வெளிப்படுத்தியதற்காக எனது பாராட்டுகளை அவருக்கு தெரிவித்தேன். கொரோனா பரவல் முழுமையாக தடுக்கப்படும் வரை ஊரடங்கை நீட்டிக்கும்படி பிரதமரை கேட்டுக்கொண்டேன். இதுகுறித்த கூடுதல் யோசனைகளை எழுத்து வடிவில் பிரதமர் கோரினார். அவை விரைவில் வழங்கப்படும். உலக அளவில் கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News