இந்தியா
MGNREGA ரத்து, பண மதிப்பிழப்பு போன்று பேரழிவு தாக்குதல்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- அதற்குப் பதிலாக VB-G RAM G மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மந்திரிசபையை கேட்காமலும், இதுகுறித்து ஆய்வு நடத்தாமலும் பிரதமர் மோடி, தானாகவே MGNREGA-ஐ அழித்துவிட்டார். நாங்கள் அதை தடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எங்களுடன் இணைந்து நிற்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
பண மதிப்பிழப்பை போன்று, பிரதமர் மோடி ஒரு நபராக மாநிலங்கள் மற்றும் ஏழை மக்கள் மீது நடத்திய பேரழிவு தாக்குதல் இது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
20 ஆண்டு கால மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் VB-G RAM G மசோதாவாக மாற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.