சினிமா செய்திகள்

ஜனநாயகன் Ramp Walk... நடனமாடிய விஜய்- பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்

Published On 2025-12-27 17:28 IST   |   Update On 2025-12-27 17:28:00 IST
  • ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது.
  • இந்த விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார்.

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட பலர் நேற்று விமானத்தில் மலேசியாவுக்கு சென்றனர்.

இம்முறை இசை வெளியீட்டு விழாவாக நடத்தாமல் தளபதி கச்சேரி என்கிற பெயரில் கான்செர்ட்டாக நடத்தப்பட உள்ளது. தற்போது புக்கட் ஜலீல் ஸ்டேடியம் அருகே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். சுமார் 80,000 பேர் கலந்து கொள்வார்கள் என கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார். அதன்பின்னர் விஜய் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார்.

அதனை தொடர்ந்து தனது வழக்கமான பாணியில் அவருடன் சேர்ந்து ரசிகர்களை செல்பி வீடியோ எடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், லோகேஷ் கனகராஜ், அட்லி ஆகியோர் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.


அதனை தொடர்ந்து தளபதி பாய்ஸ் என்ற டைட்டில் திரையில் வெளியிடப்பட்டது. அப்போது மேடையில் விஜய் உடன் இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கட்டி அணைத்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Tags:    

Similar News