செய்திகள்
கொரோனா பற்றி வதந்தி- மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கைது
பெருந்துறை அருகே நடுப்பட்டியில் கொரோனா பற்றி வதந்தி பரப்பியதாக மின்வாரிய ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரசை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக டாக்டர்களும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பெருந்துறை அருகே நடுப்பட்டியில் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதாக மின்வாரிய ஒப்பந்த ஊழியர் வெங்கடாசலத்தை போலீசார் கைது செய்தனர்.