செய்திகள்
ரேசன் அரிசி கடத்திய லாரிகள்.

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 60 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2020-03-05 11:07 GMT   |   Update On 2020-03-05 11:07 GMT
ஆம்பூர் அருகே லாரி விபத்தில் சிக்கியதால் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 60 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே மின்னூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒரு லாரி கடக்க முயன்றது. அப்போது அதன் மீது வாணியம்பாடி நோக்கி சென்ற கார் மோதியது.

அதன் பின்னால் வந்த அரசு பஸ் விபத்தில் சிக்கிய கார் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் லேசான காயமடைந்தனர்.

ஏற்கனவே விபத்துக்குள்ளான லாரியுடன் வந்த மற்றொரு லாரியும் விபத்து நடந்த இடத்தில் நின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அதன் அருகில் நின்ற மற்றொரு லாரியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது. இந்த ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டதாக என விசாரணை நடத்தினர்.

விஜயவாடாவில் இருந்து கேரளாவுக்கு 2 லாரிகளில் ரேசன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. ஆம்பூர் தாசில்தார் செண்பகவள்ளி, வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) பாரதி ஆகியோர் அங்கு சென்று 2 லாரிகளில் கடத்தப்பட்ட 60 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

வடபுதுப்பட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேசன் அரிசியை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து லாரி டிரைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News