செய்திகள்
முக கவசம் அணிந்து நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை- அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களுக்கு முக கவசம்

Published On 2020-02-05 13:33 IST   |   Update On 2020-02-05 13:33:00 IST
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் பகுதியில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் முக கவசம் அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்:

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டவர்கள் அதிகளவில் வந்து செல்லும் சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு சமீபத்தில் சீன அதிபர் வந்து சென்றதையடுத்து சீன சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கிறார்கள்.

இதனால் மாமல்லபுரம் பகுதியில் கொரோனா வைரஸ் எளிதில் பரவுமோ என்ற பயத்தில் மாமல்லபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் முக கவசம் அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ரத்த பரிசோதனைக்கு வரும் அனைத்து நோயாளிகளிடமும் நேற்று முதல் அவர்களது செல்போன் நம்பர்கள் வாங்கப்பட்டு வருகிறது. காய்ச்சல், சளி, மயக்கம், கடும் உடல்வலி, ரத்தவாந்தி, நிற்காத வயிற்றுபோக்கு, காய்ச்சலுடன் கூடிய அடிக்கடி தும்மல் இதுபோன்ற தீவிர நோயால் எவரேனும் வந்து பரிசோதிக்கும்போது கொரோனா பாதிப்பு ஏதும் இருந்தால் அவர்களை உடனடியாக தொடர்பு கொள்ளும் வசதிக்காக இந்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் மருத்துவமனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா என தினமும் செங்கல்பட்டில் இருந்து வந்து உயர் சுகாதார அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News