செய்திகள்

திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது நரசிம்மர் சிலை கண்டெடுப்பு

Published On 2019-05-31 03:39 GMT   |   Update On 2019-05-31 03:39 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கோதண்டராமர் கோவிலில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது நரசிம்மர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திண்டிவனம் சாலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் பழமைவாய்ந்த கோதண்டராமர் கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்படும் இந்த கோவிலை புதுப்பிப்பதற்காக திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்அடிப்படையில் கோவிலின் முன்பு மண்டபம் அமைப்பதற்காக நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

அப்போது 2 கைகளில் சங்கு, சக்கரம் ஏந்திய 2 அடி உயரமுள்ள பழமைவாய்ந்த நரசிம்மர் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதைபார்த்த திருப்பணிக்குழு நிர்வாகி துரைபாரதிராஜா, அருணகிரி ஆகியோர் நரசிம்மர் சிலையை எடுத்து கோவில் வளாகத்தில் வைத்தனர். அதன்பிறகு அந்த சிலைக்கு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிலை கண்டெடுக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலுக்கு வந்து நரசிம்மர் சிலையை பார்வையிட்டு வணங்கி சென்றனர். இந்த சம்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

Similar News