செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

Published On 2019-05-11 06:53 GMT   |   Update On 2019-05-11 06:53 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது.
போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாததால் காய்கறிகள் விளைச்சல் குறைந்து உள்ளது.

இது தொடர்பாக காய்கறி மொத்த வியாபாரி பெருமாள் ரெட்டி கூறியதாவது:-

ஆண்டு தோறும் கோடை வெயில் காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தண்ணீர் பிரச்சனை காரணமாக வறட்சி ஏற்பட்டு விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும்.

இந்த ஆண்டு பருவ மழை பெய்யாததால் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து காய்கறி விளைச்சல் வெகுவாக குறைந்து உள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட நான்கில் ஒரு பங்கு பச்சை காய்கறிகள் மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.

இதனால் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. இதேபோல் தக்காளி வழக்கமாக தினசரி 80 முதல் 90 லோடுகள் வரை வரும். ஆனால் விளைச்சல் பாதியாக குறைந்து உள்ளதால் தற்போது 40 லாரிகள் மட்டுமே வருகிறது.

இதனால் தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் தக்காளி விலை உயர்ந்து உள்ளது என்றும் இஞ்சி கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தற்போது கிலோ 130 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்றைய காய்கறி மொத்த விலை (கிலோ)ரூபாய் விபரம் வருமாறு:-

பெங்களூர் தக்காளி- 40
வெங்காயம்-12
சி.வெங்காயம் - 50
கேரட்-40
பீட்ரூட்-20
கத்திரிக்காய்- 20
அவரை-35
உருளை-17
இஞ்சி-130
ப..மிளகாய்-50
பீன்ஸ்-80
வெள்ளரிக்காய்-20
வெண்டைக்காய்-20
முட்டைகோஸ்-10
மாங்காய்-12
முருங்கை-15
கோவக்காய்-20
Tags:    

Similar News