செய்திகள்

23-ந் தேதிக்கு பின்னர் எடப்பாடி முதல்வராக கனவு கூட காண முடியாது- கனிமொழி பேட்டி

Published On 2019-05-08 12:45 GMT   |   Update On 2019-05-08 12:45 GMT
வருகிற 23-ந் தேதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சாராக வருவார். அவரை விமர்சிக்கும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அ.தி.மு.க.வினருக்கோ இல்லை என்று கனிமொழி கூறியுள்ளார். #kanimozhimp #mkstalin #edappadipalanisamy

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்துநகர் சி. சவேரியார்புரத்தில் தி.மு.க. காரியாலயத்தை இன்று கனிமொழி எம்.பி. திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் இருந்து நேற்று 50 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேனி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை வேட்பாளர்களிடம் கூறிய பின்னர் மாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதனால் தேர்தல் ஆணையம் மீது எதிர்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் நம்பிக்கை இல்லை. நான் ஏற்கனவே கூறிய படி தேர்தல் தோல்வி பயத்தால் ஆளுங்கட்சி, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது. 

தேர்தல் ஆணையம் சுகந்திரமாக செயல்படவில்லை. மக்களின் நம்பகத்தன்மையை பெறவில்லை. மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக கனவு தான் காணமுடியும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதற்கு முன்பு தான் முதலமைச்சர் ஆகுவோம் என்று கனவு கண்டிருக்கமாட்டார்.

வருகிற 23-ந் தேதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சாராக வருவார். அதற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தாம் முதலமைச்சர் ஆகுவோம் என்று கனவு கூட காணமுடியாது. ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அ.தி.மு.க.வினருக்கோ இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #kanimozhimp #mkstalin #edappadipalanisamy

Tags:    

Similar News