செய்திகள்

ராகுலை பிரதமராக்க எழுச்சி அலை- அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

Published On 2019-04-18 16:40 IST   |   Update On 2019-04-18 16:40:00 IST
இந்தியா முழுவதும் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற எழுச்சி அலை வீசுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். #rahulgandhi #pmmodi #TNElections2019

வில்லியனூர்:

புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் இன்று வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மணவெளியில் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார்.

பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேர்தல் அமைதியான முறையில், அதே வேளையில் விறுவிறுப்பாகவும் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. அதற்கு காரணம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

மோடியின் எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. அதேபோல் புதுவையிலும் மோடியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

இந்தியா முழுவதும் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற எழுச்சி அலை வீசுகிறது. அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்று தெரிந்து விட்டது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த தொகுதி மக்கள் ஆளுங்கட்சி வேட்பாளரை எம்.எல்.ஏ.வாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். #rahulgandhi #pmmodi #TNElections2019 

Tags:    

Similar News