செய்திகள்

தமிழகத்தில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

Published On 2019-03-23 08:38 IST   |   Update On 2019-03-23 08:38:00 IST
தமிழகத்தில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். #MeteorologicalCenter #Summer
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் நேற்று உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் சூரிய சந்திர ராவ் தலைமை தாங்கினார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் முன்னிலை வகித்தார்.



நிகழ்ச்சிக்கு பின்னர் பாலசந்திரன் நிருபர்களிடம் கூறும்போது, “இந்தியாவில் கடந்த 1980-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ” என்றார்.

உலக வானிலை தினத்தை முன்னிட்டு சென்னை வானிலை ஆய்வு மையத்தில் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் காற்றின் வேகத்தை அளக்கும் கருவி உள்ளிட்ட கருவிகள், கஜா புயல் குறித்த வானிலை படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார். #MeteorologicalCenter #Summer
Tags:    

Similar News