செய்திகள்

3 ஆயிரம் பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2019-02-27 08:29 GMT   |   Update On 2019-02-27 08:29 GMT
6 முதல் 8-ம் வகுப்பு வரை 3 ஆயிரம் பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan
பொன்னேரி:

பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயோமெட்ரிக் முறையையும், ஸ்மார்ட் வகுப்பையும் தொடங்கி வைத்தார்.

மேலும் அரசு கல்லூரியில் கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை ஏப்ரல் இறுதிக்குள் கணினி மற்றும் இணைய மயமாக்கப்படும். 6 முதல் 8-ம் வகுப்புகள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்தப்படும். ஏழைகள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். தமிழகத்தில் 1.80 லட்சம் பேர் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

இதில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், எம்.பி. வேனுகோபால், சட்டமன்ற உறுப்பினர் பலராமன், ஊரக வளர்ச்சி வங்கி தலைவர் பரிமேலழகன் கலந்து கொண்டனர். #Sengottaiyan

Tags:    

Similar News