செய்திகள்
மோடி மீண்டும் பிரதமராக வேண்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் தொழிலாளி.

மோடி மீண்டும் பிரதமராக வேண்டி 31 நாட்கள் கிரிவலம் செல்லும் தொழிலாளி

Published On 2019-02-15 06:37 GMT   |   Update On 2019-02-15 06:37 GMT
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி குருவை பூபாலன் மோடி மீண்டும் பிரதமராக வேண்டி திருவண்ணாமலையில் 31 நாட்கள் கிரிவலம் சென்று வருகிறார். #PMModi #Arakkonamworker
திருவண்ணாமலை:

வேலூர் மாவட்டம் அரக்கோணம் குருவராஜப்பேட்டையை சேர்ந்தவர் குருவை பூபாலன் (வயது 48), கூலி தொழிலாளி. இவர் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்று கடந்த 4-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வருகிறார்.



மோடி பிரதமராகிய பின்னர் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு மீண்டும் பிரதமராக மோடி நல்லாட்சி தொடர வேண்டி கடந்த 4-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரார்த்தனை செய்து வருகிறேன். வருகிற மார்ச் மாதம் 6-ந் தேதி வரை தொடர்ந்து 31 நாட்கள் கிரிவலம் செல்ல உள்ளேன்.

முன்னதாக மத்தூர் மகிஷாசூரமர்த்தினி கோவிலில் இருந்து நடைபயணமாக சென்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமியை வேண்டி பிரார்த்தனை செய்துள்ளேன்.

அதுமட்டுமின்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டியும், திருவாசகம் சிவபுராணம், திருப்பள்ளி எழுச்சி ஆகியவை 18 ஆட்சிமொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும். தேசிய நதிநீர் இணைப்பும் தென்னக நதிகளை இணைக்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்பவருக்கு இந்த அரசு உறுதுணையாக இருக்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தியும் கிரிவலம் செல்கிறேன். இதுவரை நான் அரசியலில் ஈடுபட்டதில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #PMModi #Arakkonamworker


Tags:    

Similar News