செய்திகள்
திருச்சி சிறை பெண் வார்டன் தற்கொலை- கைதான போலீஸ்காரர் சஸ்பெண்டு
காதல் பிரச்சினையில் திருச்சி சிறை பெண் வார்டன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
திருச்சி:
திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணியாற்றி வந்த செந்தமிழ் செல்வி காதல் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரது தற்கொலைக்கு காரணமான திருச்சி மத்திய சிறை வார்டனும், காதலருமான வெற்றிவேல், அவரின் அண்ணன் கைலாசம், அண்ணி ராஜசுந்தரி ஆகியோர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெற்றிவேல் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கைதான வெற்றிவேலை சஸ்பெண்டு செய்து திருச்சி மத்திய சிறை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் இன்று உத்தரவிட்டார்.