செய்திகள்

ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கியதால் அதிமுக செல்வாக்கு அதிகரிப்பு - அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2019-01-21 12:14 GMT   |   Update On 2019-01-21 12:14 GMT
ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கியதால் அ.தி.மு.க. செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று அமைச்சர் செல்லூர்ராஜூ கூறியுள்ளார். #MinisterSellurRaju #ADMK
மதுரை

மதுரை மாநகர் தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் முனிச் சாலையில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

மக்கள் நலம் பேணும் அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது. மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சி தந்து வருகிறார்.

ஏழை-எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 வழங்கியது அ.தி.மு.க. அரசு.

இதன் மூலம் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி மேலும் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.வின் செல்வாக்கும் அதிகரித்து வருவதால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள். இதனை மக்கள் நம்பமாட்டார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வராகி விட வேண்டும் என்று துடிக்கிறார். ஆனால் அவரது ஆசை நிறைவேறாது. மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது.

மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் தங்கம், துரைப்பாண்டியன், எம்.எஸ்.பாண்டியன், கிரம்மர் சுரேஷ், திரவியம், சோலை ராஜா, பரவை ராஜா, கலைச்செல்வன், சண்முவள்ளி, முத்து கிருஷ்ணன், நல்லுச்சாமி, அரியநாச்சி, பார்த்தசாரதி, சக்தி விநாயகர் பாண்டியன், பிரிட்டோ, ஜெயரீகன், எம்.டி.ரவி, சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #MinisterSellurRaju #ADMK
Tags:    

Similar News