செய்திகள்

கார் மரத்தில் மோதி விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

Published On 2019-01-17 20:14 IST   |   Update On 2019-01-17 20:14:00 IST
உடுமலையில் கார் மரத்தில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 62). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது மனைவி ஜோதிமணி (60). இவர்களது பேரன் செல்வருத்ரன்(3), உறவினர் நாச்சிமுத்து (75). ஆகியோர் ஒரு காரில் உடுமலையில் உள்ள முத்துசாமியின் இளைய மகளை பொங்கல் பண்டிகைக்கு அழைப்பதற்காக சென்றனர்.

காரை முத்துசாமி ஓட்டிச் சென்றார். கார் கொண்டாரசம்பாளையம் அருகே சென்ற போது திடீரென கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஜோதிமணி, நாச்சிமுத்து, 3 வயது சிறுவன் செல்வருத்ரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடிய முத்துசாமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் தாராபுரம் போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News