செய்திகள்
அஜித் பட பேனர் அகற்றப்பட்ட காட்சி

ஓமலூரில் அஜித் பட பேனர்கள் அகற்றம் - அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதம்

Published On 2019-01-10 14:04 GMT   |   Update On 2019-01-10 14:04 GMT
ஓமலூரில் நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் பட பேனர்களை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Viswasam
ஓமலூர்:

ஓமலூரில் நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படம் இன்று வெளியானது இதற்கு வரவேற்பு தெரிவித்தும், படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் ஓமலூர் பேரூராட்சி பகுதிகளில் பேனர்கள் வைக்க அஜித்குமார் ரசிகர்கள் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஓமலூர் பேரூராட்சி வணிக வளாகத்தின் மேலே உள்ள விளம்பர தட்டிகள் மீதும் வைக்கப்பட்டது. இதனிடையே ஓமலூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அஜித் பேனர் வைக்கப்பட்டது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓமலூர் பேரூராட்சி அதிகாரிகள் பேனர் வைக்கப்பட்ட வணிக வளாகத்திற்கு சென்று ஆய்வுகள் செய்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற முயன்றனர்.

அப்போது அங்கே வந்த திமுக சமூக ஊடாக பிரிவு நிர்வாகிகள் பிரகாஷ், சீனிவாசன் ஆகியோரும், அஜித் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். பேனரை அகற்றகூடாது என்றும் அகற்றினால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அப்போது பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி வணிக வளாக பகுதிகளில் அனுமதின்றி பேனர் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தொடர்ந்தே இங்கே வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

இதனை திமுக நிர்வாகிகள் மற்றும் அஜித் ரசிகர்கள் ஏற்க மறுத்த தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை விரட்டி அடித்தனர். தொடர்ந்து வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டு, அதற்காக அமைக்கபட்டிருந்த இரும்பு தூண்களும் அகற்றப்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #Viswasam
Tags:    

Similar News